ஜிடிஏ வைஸ் சிட்டி 6 ட்ரைலரில் இதையெல்லாம் கவனித்தீர்களா?: வைரல் வீடியோ இதோ.!GTA 6 Florida Comparison Video 

 

90 கிட்ஸ் இளைஞர்கள் முதல் 2கே கிட்ஸ் வரை பலரின் வரவேற்பை பெற்ற ஜிடிஏ வைஸ் சிட்டி கேமில், 5 பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தன. 

இதன் 6வது பாகம் 2025ல் வெளியாகிறது. இதற்கான டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தன. அவை நல்ல வரவேற்பை பெற்றுளளது. இந்நிலையில், ஜிடிஏ வைஸ் சிட்டி 6 டிரைலரில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வீடியோ காட்சிகள், அமெரிக்காவில் உள்ள புளோரிடா நகரின் செயல்பாடுகளை ஒத்தவண்ணம் இருந்துள்ளது. 

இதுதொடர்பான அதிகாரபூர்வ நிகழ்வு வீடியோக்களுடன், டிரைலர் வீடியோ காட்சிகளை ஒப்பிட்டு நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோ காட்சி உங்களுக்காக.. (வீடியோவில் சில ஆபாச காட்சிகள் இருப்பதால், சிறார்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)