உலகம் லைப் ஸ்டைல்

அம்மா..! அம்மா..! கதறிய சிறுமி...! தாய்யை தொடவிடாத கொரோனோ.! கண் கலங்க வைக்கும் வீடியோ.!

Summary:

Girl stopped to meet her mother because of corono virus

சீனாவின் உஹான் நகரில் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில் இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 450 பேருக்கும் மேல் உயிர் இழந்துள்ளனர். சீனா மருத்துவர்களும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் தனது தாயை சந்திக்க அவரின் சிறு வயது மகள் ஒருவர் வந்துள்ளார். ஆனால், அந்த சிறுமியை அவரது தாய்யை சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டனர். காரணம் சிகிச்சை வழங்கும்போது அவரது தாய்க்கு தொற்று ஏற்பட்டு அந்த சிறுமிக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அந்த சிறுமி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

எனவே, தனது தாய்யை பிரிய மனமில்லாமல் அந்த சிறுமியும், மகளை பிரிய மனமில்லாமல் அந்த தாயும் நடத்திய பாச போராட்டம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. தூரத்தில் நின்றுகொண்டு தனது மகளை கட்டிப்பிடிப்பதுபோல் அந்த தாய் சைகை செய்ய, அந்த சிறுமியும் கட்டிப்பிடிப்பதுபோல் சைகை செய்கிறார்.

மேலும், தான் கொண்டுவந்த உணவை ஒரு இடத்தில் வைத்துவிட்டு அந்த சிறுமி செல்ல, அவரது தாய் அந்த உணவை எடுத்து செல்கிறார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி இணையாயத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement