2 லட்சம் முறை லவ்டார்ச்சர் கொடுத்த இளம்பெண்! இளைஞன் எடுத்த விபரீத முடிவு!



girl give love torture to youngman

அமெரிக்காவின் அரிசேனா மாகாணம் பீனிக்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் ஜாக்குலின் அடஸ், 
ஜாக்குலின் டேட்டிங் சைட் மூலம் இளைஞர் ஒருவரை சந்தித்துள்ளார்.அவர்கள் ஒரு முறை டேட் சென்றபோதே ஜாக்குலினிற்கு அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அடுத்த டேட்டிற்கு அந்த இளைஞர்  ஜாக்குலினுடன் செல்ல விரும்பாததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இந்த பிரிவை தாங்க கொள்ள முடியாத ஜாக்குலின்,அவர் தனது மனதில் உள்ள கவலையை ஒவ்வொன்றாக தனது காதலனுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

love torture

மேலும் அவரது காதலன் அனைத்து மெசேஜ்களையும் படித்துவிட்டு பதில் அளிக்காததால், ஆத்திரமடைந்த ஜாக்குலின் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி கொண்டே இருந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த  ஜாக்குலினின் காதலன் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரது செல்போனை சோதனை செய்ததில் ஜாக்குலின் சுமார் 1.59 லட்சம் மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து போலீசார் ஜாக்குலின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.