உலகம் லைப் ஸ்டைல்

30 கிலோ ஆரஞ்சு பழத்துடன் விமான நிலையத்திற்கு சென்ற 4 பேர்.. சென்ற இடத்தில் காசித்திருந்த அதிர்ச்சி.. இறுதியில் நடந்த சோகம்!

Summary:

விமானநிலையத்தில் கூடுதல் லக்கேஜ் கட்டணம் செலுத்துவதற்கு மறுத்து 4 இளைஞர்கள் 30 கிலோ ஆரஞ்சு பழத்தை சாப்பிட வினோத சம்பவம் நடந்துள்ளது.

விமானநிலையத்தில் கூடுதல் லக்கேஜ் கட்டணம் செலுத்துவதற்கு மறுத்து 4 இளைஞர்கள் 30 கிலோ ஆரஞ்சு பழத்தை சாப்பிட வினோத சம்பவம் நடந்துள்ளது.

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில், வாங் என நபர் ஒருவர் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து வணிக பயணம் ஒன்றிற்காக குன்மிங் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். விமான நிலையத்திற்குள் செல்வதற்கு முன்னதாக வெளியில் இருந்த கடை ஒன்றில் 50 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 564) மதிப்பிலான 30 கிலோகொண்ட ஆரஞ்சுப்பழ பெட்டி ஒன்றை தங்களுடன் எடுத்துச்செல்வதற்க்காக அவர்கள் வாங்கியுள்ளனர்.

பாவம் அப்போது அவர்களுக்கு தெரியவில்லை அதன் பின்னால் இருந்த விளைவு. வாங்கிய பெட்டியுடன் விமானத்தில் என்ற சென்றபோது அவர்கள் கொண்டுவந்த ஆரஞ்சு பெட்டிக்கு லக்கேஜ் கட்டணம் போடப்பட்டுள்ளது. ஒரு கிலோவுக்கு 30 யுவான் என 30 கிலோ ஆரஞ்சு பலத்திற்கும் மொத்தம் 300 யுவான் (இந்திய மத்தியில் ரூ. 3384) கட்டணம் கோரப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நான்கு நண்பர்களும், தாங்கள் ஆரஞ்சு பழம் வாங்கிய விலையை விட அதற்கான லக்கேஜ் கட்டணம் அதிகமாக இருப்பதாக கருதி அந்த 30 கிலோ பழங்களை அங்கையே சாப்பிட்டு விடலாம் என முடிவு செய்தனர். இதனை அடுத்து பழ பெட்டியை திறந்து 30 கிலோ ஆரஞ்சு பழங்களை 30 நிமிடத்தில் தின்று முடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்துவருகிறது. அதேநேரம் அந்த நான்கு பேரும் ஒரே நேரத்தில் சிட்ரஸ் அமிலம் நிறைந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டதால் தற்போது வாய் புண்ணால் அவதிப்படுவருகின்றனர்.


Advertisement