உலகம்

ரயில் தண்டவாளத்தில் சிக்கிய மகள்! ஹீரோவாக மாறிய தந்தை! வைரலாகும் திக் திக் வீடியோ!

Summary:

father saved his daughter from train track

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த தனது மகளை நெஞ்சோடு இறுக அணைத்து, அவருடைய தந்தை காப்பாற்றியிருக்கும் அதிர்ச்சி வீடியோவானது இணையத்தில் பாராட்டுக்களை குவித்த வண்ணம் உள்ளது.

எகிப்து நாட்டின் இஸ்லாமிய நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் 50 வயது தந்தை ஒருவர் தனது 13 வயது மகளுடன் ரயில்வே நடைமேடையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களுக்குப் பின் பகுதியிலிருந்து ரயில்வே தண்டவாளத்தில் வந்த ரயிலிலிருந்து பலமாக ஹாரன் சத்தம் கேட்டது.

அந்த சத்தத்தினால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தடுமாறி தண்டவாளத்திலே விழுந்துள்ளார்.அங்கிருந்த மற்ற பயணிகள் அனைவரும் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்ததால் அங்கிருந்து நகருமாறு சிறுமியின் தந்தையை கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அவற்றை காதில் வாங்காத அந்த தந்தை தனது மகளுக்காக துணிவுடன் வேகமாக குதித்து, தனது மகளை அனைத்து காப்பாற்றியுள்ளார். இவை அனைத்தையும் அங்கிருந்த இளைஞர் ஒருவர் செல்போனில் படம்பிடித்துள்ளார். அந்த நொடிகளில், எங்களுடைய இதயமே நின்றுபோய்விட்டது என நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

 இந்த வீடியோவை பார்த்த பலர் அந்த தந்தையைப் பாராட்டி வருகின்றனர். உங்களுக்கும் அந்த தந்தை செய்த செயல் பிடித்திருந்தால் பாராட்டுங்கள்.


Advertisement