போலீசாருக்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை.! அதிர்ச்சி சம்பவம்.!

போலீசாருக்கு பயந்து 7-வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை.! அதிர்ச்சி சம்பவம்.!


family members suicide for fear to police

சுவிட்சர்லாந்து நாட்டில் போலீசார் விசாரணைக்கு பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் மோன்ட்ரீயுக்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் 51-வயதை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி , மகன் , மகள் மற்றும் மனைவியின் சகோதிரியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் குற்ற வழக்கில் ஈடுபட்டதாக அந்த குடும்பத்தின் தலைவரை போலீசார் கைது செய்ய வாரண்ட் உடன் சென்றுள்ளனர்.

அப்போது தங்களது வீட்டிற்கு போலீசார் வருவதை ஜன்னல் வழியாக பார்த்த அந்த குடும்பத்தினர் கதவை திறக்காமல் ஒட்டுமொத்தமாக 7-வது மாடியில் இருந்து குதித்துள்ளனர். போலீசார் அவர்களது வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே அவர்கள்  7-வது மாடியில் இருந்து குதித்துள்ளனர். தற்கொலை செய்ய முயன்ற 5 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த ஒருவர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணைக்கு பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.