உலகம்

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி! பனியை கண்டதும் சந்தோஷத்தில் உருண்டு சுரண்டு விளையாடிய யானை!

Summary:

Elephant playing in snow

ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்ற இரண்டு யானைகளுள் ஒரு யானை பனியை கண்டதும் சந்தோசத்தில் உருண்டு புரண்டு விளையாடிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் யாக்டெரின்பர்க் நகரில், இத்தாலிய சர்க்கஸ் நிறுவனத்தில் சர்க்கஸ் காட்சிகள் நடைப்பெற்று வருகின்றன. அந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக கார்லா, ரன்னி என்ற இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டன.

அப்போது கார்லா என்ற பெண் யானை வண்டியில் ஏறாமல் சாலைக்கு ஓடி சென்றது. அதனை துரத்தி கொண்டே சென்றனர் ஊழியர்கள். அங்கு அந்த யானை பனியை கண்டதும் சந்தோசத்தில் விளையாடும் காட்சி அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

அந்த சாலையில் உள்ள பனியில் தனது முன்னங்கால்களை மடக்கி உட்கார்ந்த யானை பின்னர் புரண்டு ஜாலியாக விளையாடுகிறது. சிறிது நேரம் விளையாடிய பின்னர் ஊழியர்கள் அந்த யானையை அழைத்து செல்கின்றனர்.


Advertisement