அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் சதி செய்ய முயற்சி.! டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு.!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் சதி செய்ய முயற்சி.! டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டு.!


donald trump talk about election result

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் ஆகியோரின் இரு கட்சிகளுக்கிடையே போட்டி நீடித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார் என தகவல் வெளியானது. சற்று முன் வரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் போது, டிரம்ப்பிற்கு கடும் போட்டியாக ஜோ பிடன் இருந்து வருகிறார் என கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.


டொனால்ட் டிரம்ப் அவரது ட்விட்டர் பக்கத்தில், "அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. இன்றிரவு வெற்றி குறித்து அறிவிப்பேன். மேலும், தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சிகள் சதி செய்ய முயற்சி" என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.