உலகம் வீடியோ

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்! தாய்நாட்டிற்கு திரும்பியவர்களுக்கு இப்படியொரு கதியா? வைரலாகும் ஷாக் வீடியோ!

Summary:

disinfectant sprayed for indonesia people who return from china

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் தோன்றிய கொரனோ வைரஸ் தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. மேலும் இந்த கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 350 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.அங்கிருந்து வெளியே யாரும் செல்லவோ அல்லது உள்நுழையவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில் இருக்கும் பல நாட்டினரும் தங்களது தாயகம் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் சீனா வுஹான் நகரில் இருந்து இந்தோனேசியாவை சேர்ந்த மக்கள் நேற்று  தனி விமானத்தில் தங்களது நாட்டிற்கு  திரும்பினார்கள். அப்பொழுது பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறங்கி நடந்து வந்த போது அங்கிருந்த ஊழியர்கள் அவர்கள் அனைவரின் மீதும் கிருமிநாசினியை தெளித்தார்கள். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 


Advertisement