இறந்து 20 நிமிடம் கழித்து உயிர்பிழைத்த வினோத இளைஞன்- எப்படி இது நடந்தது!

இறந்து 20 நிமிடம் கழித்து உயிர்பிழைத்த வினோத இளைஞன்- எப்படி இது நடந்தது!


different-young-men

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்த நிலையில், உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இச்சம்பவம் அமெரிக்காவின் மிச்சிகன் மகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

மிச்சிகன் மகாணத்தில் மைக்கேல் ட்ரூட் என்னும் இளைஞன் மின்சாரம் தாக்கியதாக மயக்க நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்த அவருக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தனர்.

America

ஆனாலும் அவரின் உடலில் எந்தவிச அசைவும் இன்றி இதயத் துடிப்பு நின்று விட்ட நிலையில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.அதன் பின் அவரது உடலைப் பிரேத பரிசோதனைக்கு தயார் செய்த மருத்துவர்கள் அவர் உடலில் அசைவுகள் ஏற்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதை அடுத்து மீண்டும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.அதன் பிறகு அந்த இளைஞன் உயிர் பிழைத்துள்ளார்.இந்த சம்பவம் மருத்துவமனையில் உள்ள அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உயிரிழந்து 20 நிமிடம் கழித்து உயிர்பிழைத்த அந்த இளைஞனை நினைத்து அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.