இறந்துபோன சிறுமி உயிருடன் எழுந்து வந்து மீண்டும் இறந்துபோன சோகம்..! அடுத்தடுத்து நடந்த சோக சம்பவம்.!



dead-girl-12-wakes-up-while-family-clean-her-body-for-b

உயிரிழந்ததாக கூறப்பட்ட 12 வயது இறுதிச் சடங்கின்போது கண்விழித்த சம்பவமும் மீண்டும் சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேஷிய நாட்டை சேர்ந்த வர்தா என்ற 12 வயது சிறுமி தந்து சிறுவயதுமுதல் ஹார்மோன் குறைபாடு காரணமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரது உடல் நிலை மிக மோசம் அடைந்ததை அடுத்து அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் உடலை வீட்டுக்கு கொண்டு வந்த உறவினர்கள் சிறுமிக்கு இறுதி சடங்குகள் செய்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இறுதிச் சடங்கின்போது சிறுமியின் உடலை குளிப்பாட்டிய போது சிறுமி லேசாக தனது கண்களைத் திறந்து பார்த்துள்ளார். மேலும் அவரது உடலின் வெப்பமும், இதயத் துடிப்பும் இருந்ததை உணர்ந்த அங்கிருந்தவர்கள் உடனே சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதித்துள்ளனர். 

Mysterious

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆனால் சிறுமி மீண்டும் சிறிது நேரத்தில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனையடுத்து சிறுமிக்கு மீண்டும் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்ததாக கூறப்பட்ட சிறுமி இறுதி சடங்கில் கண்விழித்ததும், மீண்டும் அந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.