மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த தந்தை.! உயிர் பிழைத்த மகன்.! தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்.!

மகனைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த தந்தை.! உயிர் பிழைத்த மகன்.! தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்.!


dad died while recover to son

கனடாவில் வாழ்ந்து வந்தவர் பகிர் ஜுனைதீன். 57 வயது நிரம்பிய இவர் இலங்கையிலிருந்து 25 வருடங்களுக்கு முன்பு கனடா வந்து கணினி வலை வடிவமைப்பு மற்றும் கிராபிக்ஸ்(computer web design and graphics business) வணிகத்தை சொந்தமாக நடத்தி வந்துள்ளார்.

 இந்தநிலையில், கடந்த வார இறுதியில் ஜுனைதீன் குடும்பத்தினர் அங்குள்ள பொழுபோக்குப் பூங்கா ஒன்றிற்குச் சென்றுள்ளனர். அங்கு ஜுனைதீன் மற்றும் அவரது 9
 வயது மகனான சையது நண்பர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் சென்றுள்ளனர். அப்போது திடீரென அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து.

dad died

முதலில் ஜுனைதீனின் மகன் சாய்த்து தண்ணீருக்குள் விழுந்திருக்கிறான். இதனை பார்த்த ஜுனைதீன் உடனடியாக மகனைக் காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக சைய்யதை காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஜுனைதீன் மாயமானார்.

இதனையடுத்து ஜுனைதீனின் மனைவி தன் கணவரைக் காணவில்லை என்று அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து மீட்பு படையினர் தண்ணீரில் குதித்து ஜுனைதீனை தண்ணீரிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜுனைதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.