உலகம்

கொரோனாவின் கொடுமை..! காரிலிருந்து இறங்கி வந்தவரை எப்படி வரவேற்கிறாங்கனு பாருங்க.! வைரல் வீடியோ.!

Summary:

Corono virus effect man shaking legs instead of hands

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. வைரஸ் பரவ தொடங்கி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

மேலும், சீனா உட்பட 50 கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவ தொடங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழக்கூட கடும் சிரமப்பட்டு வருகின்றனர். என்னேரமும் முகத்தில் மாஸ்க் அணிந்து வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் காரிலிருந்து நபர் ஒருவர் இறங்கிவருகின்றார். அவரை வரவேற்க கைகொடுக்க வந்தவர்களிடம், அவர் சற்று உஷாராகி தனது கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து தனது காலுடன், எதிரே இருப்பவர்களின் காலினை கைக்கொடுப்பது போன்று பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement