உலகம்

தீவிரமடையும் கொரோனா வைரஸ்..! இதுவரை உயிர் இழந்தவர்க்ளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா.?

Summary:

Corono virus dead rate

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் இருந்து தொடங்கிய உயிரை பறிக்கும்   கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்கள் ஒருவித நிமோனியா காயச்சலுக்கு உள்ளாகி மரணத்தை தழுவி வருகின்றனர்.

பாம்பு சூப்பில் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரை பறித்துவரும் இந்த கொடூர வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீனா உட்பட உலக நாடுகள் முழுவதும் கடும் அச்சத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 170 ஆக உயர்ந்துள்ளது. சீனா முழுவதும் 5,974 பேர் இந்த கொடிய வைரசின் பிடியில் சிக்கியிருப்பதாக சீனா அரசு அதிரகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


Advertisement