உலகம் மருத்துவம்

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம்! நெட்டிசன்களால் பகிரப்படும் வீடியோ!

Summary:

corono virus attack


சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மக்கள் சாலையில் சுருண்டு மடியும் சம்பவங்களின் அதிர்ச்சிக் காட்சி தற்போது வெளிவந்துள்ளது.

சீனாவில் இருந்து பரவிவரும் கொரனோ வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சீனாவில் கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 106 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், மேலும் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீனாவில் இதனை தடுக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை சீன அரசு நாடியுள்ளது.

இந்நிலையில் சாலையில் சுருண்டு விழுந்து 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் மனிதர்களின் காட்சி என்ற வீடியோ தற்போது வெளியாகி வருகிறது. ஆனால் அது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு விழுபவர்களின் வீடியோவா என யாரும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. நெட்டிசன்களால் பகிரப்பட்டு வரும் வீடியோவாகவே கருதப்படுகிறது.

 சீனாவில் இதனை தடுக்கும் நடவடிக்கையில் பல முன்னேற்பாடுகள் மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல் பல நாடுகளிலும் . இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.
 


Advertisement