தீவிர கண்காணிப்பில் 102,000 பேர்..! வேகமாக பரவும் கொரோனா வைரஸ்..! கிடுகிடுவென உயரும் இறப்பு எண்ணிக்கை..!
தீவிர கண்காணிப்பில் 102,000 பேர்..! வேகமாக பரவும் கொரோனா வைரஸ்..! கிடுகிடுவென உயரும் இறப்பு எண்ணிக்கை..!

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸ் பாம்பு சூப்பில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கவோ அல்லது சரிசெய்யவோ இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் சீனாவை தாண்டி மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கேரளாவை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இந்தியா போன்று மற்ற அண்டை நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்னிக்கை நேற்றுவரை 170 ஆக இருந்த நிலையில் இன்று 213 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 10000 பேருக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 102,000 பேர் கொரோனா இருப்பதற்கான அறிகுறியுடன் இருப்பதாகவும், அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.