கொரோனா வைரஸின் உச்சகட்ட பதட்டம்! தண்ணீர் பாட்டிலை தலையில் அணிந்துகொண்டு உயிரைக் காப்பாற்ற துடிக்கும் மக்கள்!



coronavirus  attack people

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சீன அரசு தீவிரமாக முயன்று வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனப் புத்தாண்டு விடுமுறையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சாலையில் சுருண்டு விழுந்து 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொரோனாவின் பாதிப்பால் கீழே விழும் நபர்களை அடுத்தவர்கள் காப்பாற்றக்கூட முன்வரவில்லை. 

இந்த வைரஸின் காரணமாக பயம் எற்பட்டு காப்பாற்ற முன்வராமல் சுற்றி நின்று மக்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். மேலும் மாஸ்க் கிடைக்காமல் தண்ணீர் பாட்டிலை தலையில் அணிந்துகொண்டு உயிரைக் காப்பாற்றி வருகின்றனர்.