உலகம் மருத்துவம்

கொரோனா வைரஸ் தாக்கியவரின் உடலில் என்ன மாற்றம் ஏற்படும்? மருத்துவர்கள் வெளியிட்ட புகைப்படம்!

Summary:

corona virus x ray


கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000-யை தாண்டியுள்ளது. சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.

உலகம் முழுவதும் மொத்தம் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு  இந்த வைரஸ் நோய் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 80 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த கொடூர வைரஸால் சீனாவில் மட்டும் 2912 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 33 வயது பெண்ணின் எக்ஸ்-ரே புகைப்படங்களை மருத்துவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். சீனாவில் பெண்ணொருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 33 வயது பெண்ணான அவருக்கு ஐந்து நாட்கள் கடுமையான காய்ச்சல் இருந்தது.

இதனையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணின் வெள்ளை அணுக்கள் குறைவாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அவருக்கு  கொரோனா வைரஸ் தாக்கியதை உறுதி செய்தனர். மேலும் அந்த பெண்ணின் மார்பக பகுதியில் எடுக்கப்பட்ட எக்ஸ்-ரே  புகைப்படங்களை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதில், நுரையீரலின் கீழ் மூலையில் வெள்ளை திட்டுகள் இருப்பது தெரிகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், காய்ச்சல், சளி, சுவாச கோளாறு, தொண்டை புண் ஆகியவை புதிய கொரோனா வைரஸின் அறிகுறிகள் என கூறினார். கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் நுரையீரல் பகுதி எப்படியிருக்கும் என்பதை காட்டுவதற்காக இந்த எக்ஸ்-ரே  வெளியிடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Advertisement