இந்தியா உலகம்

கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்..! அவசர அவசரமாக நடந்த ஆப்ரேஷன்..!

Summary:

Corona virus suspected women gave birth through operation

சீனாவில் இருந்து பரவிவரும் கொரனோ வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சீனாவில் கொரனோ வைரஸ் பாதிப்பினால் இதுவரை 106 பேர் உயிர் இழந்துள்ளதாகவும், மேலும் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர 1000 படுக்கைகள் கொண்ட அதி நவீன மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறது சீனா. இந்நிலையில் வைரஸ் தோற்று அதிகம் இருக்கும் பகுதியாக கருதப்படும் வுகான் நகரில் கர்ப்பிணி பெண் ஒருவர் உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையை மருத்துவர்கள் பாதுகாப்பதற்காக அந்த பெண்ணிற்கு உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement