1,436 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்! சிக்கி தவிக்கும் அமெரிக்கா!



Corona spread in america jail

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 80,121 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 13,50,194 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 2,38,144 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

corona
இந்தநிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லம்போக் என்ற இடத்தில் உள்ள மத்திய சிறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 70 சதவீத கைதிகளுக்கு, அதாவது 792 கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறை ஊழியர்கள் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


அதேபோல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், டெர்மினல் தீவில் உள்ள மத்திய சிறையில் 50 சதவீத கைதிகளுக்கு, அதாவது 644 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.