உலகம் மருத்துவம்

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் குவிந்த பலி எண்ணிக்கை! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Corona death increase in america

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1200 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 9,618 ஆக உள்ளது. 

சீனாவில் ஆரம்பித்த கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதலால் நோய்த்தொற்று பரவுவோர் எண்ணிக்கையும், கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில், பல நாடுகளில்  சமூக விலகலை கடைபிடித்து வருகின்றனர். கொரோனாவின் கோர தாண்டவத்தால் அமெரிக்கா கடும் துயரத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை  336,830 ஆக உள்ளது.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. 

அமெரிக்காவில் நியூயார்க் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டியது. நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1200 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 9,618 ஆக உள்ளது. 


Advertisement