கொரோனாவை வைத்து பல கோடிகளை சம்பாதிக்கும் சீனா..! ஒரே மாதத்தில் 1.4 பில்லியன் டாலர் வருமானம்.!china-says-it-has-sold-nearly-four-billion-masks-abroad

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலக பொருளாதாரமே கொரோனாவால் முடங்கியுள்ளநிலையில், கொரோனாவை வைத்து பல கோடிகளை சம்பாதித்து வருகிறது சீனா.

சீனா கொரோனோவில் இருந்து ஏறக்குறைய மீண்டுல நிலையில், சீனாவில் இருந்து முகமூடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பலநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.  இதுகுறித்து சீனா அதிகாரிகள் கூறியுள்ள தகவலில்,

கடந்த மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து 3.86 பில்லியன் முகமூடிகள், 37.5 மில்லியன் பாதுகாப்பு உடைகள், 16 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மற்றும் 2.54 மில்லியன் கோவிட் 19 சோதனை கருவிகளை 50க்கும் மேற்பட்ட உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

corono

இதன்மூலம், சீனாவுக்கு 1.4 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும், சீனாவின் பொருட்களை வாங்கியுள்ள நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வேறுசில நாடுகள் சீனா தங்கள் நாட்டில் இறக்குமதி செய்துள்ள மருத்துவ பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக புகார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.