5 நிமிட வீடியோ காலால் நடந்த அவசர திருமணம்! அதற்கு 37 லட்சம் செலவு.....ஆனால் திருமணமான 9 நாளில் நடந்த பெரிய ட்விஸ்ட்! பகீர் பின்னணி..!!!
கிழக்கு சீனாவை சேர்ந்த 32 வயதான இளைஞர் ஒருவர், வெறும் ஐந்து நிமிட வீடியோ கால் உரையாடலின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டு, ஒன்பது நாட்களிலேயே விவாகரத்து கோரிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஏற்பாட்டு மையத்தின் மூலம் நடந்த இந்த திருமணம் தற்போது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
வீடியோ கால் பார்த்து நடந்த அவசர திருமணம்
தகவலின்படி, கு என்ற இளைஞருக்கு வடமேற்கு சீனாவை சேர்ந்த 30 வயது பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணப்பெண் விலை மற்றும் திருமண ஏற்பாட்டுக் கட்டணம் உள்ளிட்ட செலவுகளாக மொத்தம் 2,65,000 யுவான், அதாவது சுமார் 37 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆச்சரியமாக, பெண்ணின் பெற்றோரை நேரில் சந்திக்காமலேயே குடும்பத்தினர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
திருமணத்துக்குப் பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்
திருமணத்திற்குப் பிறகு மனைவியின் வங்கி கணக்கு விவரங்களை கணவர் ஆய்வு செய்தபோது பல தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் காதலருடன் தொடர்புடைய சுமார் 14 லட்சம் ரூபாய் கடன் இருந்ததுடன், அவருக்கு கல்லீரல் பாதிப்பும் இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், திருமண ஏற்பாட்டு மையம் வழங்கிய பெயரும், அந்த பெண்ணின் உண்மையான பெயரும் வேறுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கட்டிய தாலியில் ஈரம் கூட காயல!! மனைவியை நினைத்து உயிரைவிட்ட கணவன்...
விவாகரத்து கோரிய கணவர்; எதிராக வழக்கு தொடர்ந்த மனைவி
இந்த தகவல்களால் அதிர்ச்சியடைந்த கு, திருமணமான ஒன்பதாவது நாளிலேயே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதையடுத்து, தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி அந்த பெண் சுமார் 7 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி கணவர் மீது திருப்பி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கிடையே, திருமண ஏற்பாட்டு மையமும் பெற்ற தொகையை திருப்பித் தர மறுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய கால அறிமுகம் மற்றும் அவசர முடிவுகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து சீன நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.