வெறும் 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை.! 130 நாட்கள் நடந்த போராட்டம்.! இறுதியில் வெற்றிபெற்ற சீன மருத்துவர்கள்.!china-doctors-saves-550-gram-premature-baby

வெறும் 550 கிராம் எடையுடன் குறைமாதத்தில் பிறந்த குழந்தையை சீன மருத்துவர்கள் காப்பாற்றி அந்த குழந்தையை நலமுடன் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தம்பதியினர் ஒருவருக்கு சுமார் 22 வாரங்கள் மற்றும் 6 நாட்களே ஆன நிலையில் வெறும் 550 கிராம் எடையுடன் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை சிச்சுவான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேற்குச் சீன இரண்டாவது மருத்துவமனையில் 130 நாட்கள் வைத்த மருத்துவர்கள் பாதுகாத்து, சிகிச்சை வழங்கிவந்துள்ளனர்.

Mysterious

இதனிடையே என்என் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை கடந்த 3 ஆம் தேதி உடல்நலம் தேறி பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குழந்தை வீட்டிற்கு செல்லும்போது அதன் எடை சுமார் 3840 கிராம் இருந்ததாகவும், குழந்தை ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.