தீவிரமடையும் கொரனா வைரஸ்.. வெறும் 6 நாட்களில் பிரமாண்ட மருத்துவமனையை கட்டும் சீனா..!

தீவிரமடையும் கொரனா வைரஸ்.. வெறும் 6 நாட்களில் பிரமாண்ட மருத்துவமனையை கட்டும் சீனா..!



china-building-new-hospital-in-6-days

சீனாவில் கொரனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், 1000 படுக்கைகள் கொண்ட புது மருத்துவமனை ஒன்றை அந்நாட்டு அரசு கட்டிவருகிறது. உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் இந்த கொரனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வுஹான் என்னும் நகரத்தில் இருந்துதான் இந்த வைரஸ் பரவ தொடங்கியது, இதனை அடுத்து ஹூபே, குவாங்கங், செஜியாங், குவாங்டாங், ஜியாங்சி ஆகிய நகரங்களில் இந்த பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில், இந்த பகுதியில் இருக்கும் சுமார் 3 கோடி பேர் பேர் வெளி உலகுடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர்.

Corono virus

இந்நிலையில் இந்த வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக புது மருத்துவமனை ஒன்றை வெறும் ஆறு நாட்களில் கட்டி வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது சீன அரசு. Prefabricated building என்ற முறையில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்திற்கு 100 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர்.