பார்க்க பார்க்க பதறுது! கடலில் திடீரென மேலே வந்து வந்து போகும் மர்ம உருவங்கள்! அது அசையும் காட்சிகள்! வைரலாகும் பகீர் வீடியோ...



chile-sea-mystery-creatures-video

சமூக வலைதளங்களில் பரபரப்பாகும் பல வீடியோக்களில், சில நேரங்களில் இயற்கையைச் சற்று வியப்பில் ஆழ்த்தும் காட்சிகள் பரவுகின்றன. அந்த வகையில் தற்போது சிலி கடற்கரை அருகே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

மர்ம உருவங்கள் அசையும் வீடியோ

லிலியானா என்ற பெண் பதிவுசெய்த ஒரு வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் கடலின் மேற்பரப்பில் ஒரே நேரத்தில் மேலே மற்றும் கீழே அசையும் மர்ம உருவங்கள் பதிவாகியுள்ளன. இது ஒரு பெரிய உயிரினமாகவோ அல்லது பல உயிரினங்கள் ஒருசேர அசைவதுபோலவோ காணப்படுகிறது.

வீடியோவை பகிர்ந்த இனைப்புகள்

இந்த வீடியோ @scaryencounter என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. இதனை தற்போது வரை 60,000க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். வீடியோவில் காணப்படும் அசைவுகள் பல்வேறு கூற்றுகளுக்குக் காரணமாக உள்ளன.

இதையும் படிங்க: Video: பாம்பை விழுங்க முயன்ற எருமை மாடு! பாம்பு தப்பிக்க என்னா பண்ணுது பாருங்க! கடைசியில் என்னாச்சுன்னு தெரியுமா? திக் திக் நிமிட காணொளி...

திமிங்கலமா அல்லது வேறு உயிரினமா?

வீடியோவை பார்த்த நெட்டிசன்களில் சிலர் இது திமிங்கலக் குழுவாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். திமிங்கலங்கள் பெரும்பாலும் கூட்டமாக மேலே வரும் பழக்கமுள்ளவை என்பதால், அவை இவ்வாறு காட்டப்படலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

மற்றொரு பக்கம், சில நெட்டிசன்கள் இதை மனித உருவங்களோடு ஒத்த மர்ம கடல் உயிரினங்கள் என்கின்றனர். சிலர் இவை கடற்கன்னிகள் என்றும், இன்னும் உலகத்தால் கண்டறியப்படாத உயிரினங்கள் என்றும் நம்புகின்றனர்.

நிலநடுக்கத்தின் தாக்கமா?

சமீபத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கடலுக்கு அடியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் இந்த உருவங்கள் மேலே வந்திருக்கக்கூடும் என்பதும் ஒரு கோட்பாடாக உள்ளது.

இது உண்மையா அல்லது இயற்கையின் விளையாட்டா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது வரை மக்களிடையே பெரும் ஆர்வத்தையும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது.

 

இதையும் படிங்க: துள்ளி குதித்து ஓடிய மானை ஒரே பாய்ச்சலில் பாய்ந்து பிடித்த சிறுத்தை! துல்லியமாக வேட்டையாடி வென்ற தருணம்! வைரலாகும் வீடியோ...