பணக்காரரை மட்டும் பார்த்து திருமணம் செய்யாதீங்க.... CEO வெளியிட்ட எமோஷனல் பதவி!!!



ceo-marriage-money-debate-social-media

திருமண வாழ்க்கையில் பணமா முக்கியம், இல்லையா பரஸ்பர புரிதலா என்ற விவாதம் மீண்டும் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. குருகிராமைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வெளியிட்ட பதிவு தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் குவிந்து வருகின்றன.

பணக்காரர் என்பதற்காக மட்டும் திருமணம் வேண்டாம்

சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அந்த சிஇஓ, பெண்கள் தங்களது வாழ்க்கைத்துணையை தேர்வு செய்யும்போது ஒருவரின் செல்வத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார். ஒரு உறவு முழுவதும் பொருளாதார நிலையை மையமாகக் கொண்டு உருவானால், அங்கு பரஸ்பர மரியாதை மற்றும் சமத்துவம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவலின்படி, உறவில் ஒரே தரப்பினரிடம் அதிக அதிகாரமும் கட்டுப்பாடும் குவியும் சூழல் உருவாகலாம் என்றும் அவர் தனது கருத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படிங்க: களிகாலம்... தண்ணீருக்குள்ளையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை! பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஸ்கூபா டைவிங் பயிற்றுவிப்பாளர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோவால் பெண்களுக்கு எச்சரிக்கை!!!

வெற்றிகரமான உறவின் அடிப்படை என்ன?

திருமண வாழ்க்கையை நீண்ட காலம் நிலைநிறுத்துவது பணம் அல்ல என்றும், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது, ஒரே மாதிரியான சிந்தனைகள், உணர்வுபூர்வமான இணைப்பு மற்றும் பரஸ்பர மதிப்பு போன்ற அம்சங்கள்தான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பணம் வாழ்க்கையை வசதியாக மாற்ற உதவும். ஆனால் அது மட்டும் ஒரு திருமண வாழ்க்கையை வலுப்படுத்தாது என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இரு தரப்பாக பிரிந்த நெட்டிசன்கள்

இந்த கருத்து வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர் சிஇஓவின் கருத்தை வரவேற்று, உறவுகளில் மனிதநேய மதிப்புகளே முக்கியம் என்று கூறி வருகின்றனர்.

மறுபுறம், எதிர்கால பாதுகாப்பு மற்றும் குடும்ப நிலைத்தன்மைக்கு பொருளாதார வலிமையும் அவசியம் என்பதால் அதை கருத்தில் கொண்டு துணையைத் தேர்வு செய்வதில் தவறில்லை என்று சிலர் வாதிடுகின்றனர். மேலும், இந்த ஆலோசனை பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் பொருந்தும் என பலர் கருத்து தெரிவித்து வருவதால், நவீன கால திருமணங்களின் உண்மையான அடிப்படை என்ன என்பது குறித்த விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

 

இதையும் படிங்க: #அதிர்ச்சி செய்தி.... திருமாவளவனுக்கு முதல்வர் பதவி..... யாரும் எதிர்பாராத திருப்பம்! தமிழக அரசியலில் பரபரப்பு.!!!