உலகம் Covid-19

விலங்குகளையும் விடாது துரத்தும் கொரோனா; நியூயார்க்கில் இரண்டு பூனைகளுக்கு பாதிப்பு!

Summary:

Cats affected by corono at new york

மனதர்களை வாட்டி வதைக்கும் கொரோனா வைரஸ் நியூயார்க்கில் இரண்டு பூனைகளையும் பாதித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவ துவக்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த கொரோனா எப்படி பரவ துவங்கியது என்பது இன்னும் தெரியவரவில்லை.

இந்நிலையில் மனிதர்களை மட்டுமல்லாமல் விலங்குகளையும் கொரோனா வைரஸ் தாக்குவது கண்டறியப்பட்டு வருகிறது. இந்தியாவில் கூட ஒருசில இடங்களில் வௌவாலிற்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

அமெரிக்காவில் அதிக பாதிப்புகளை கொண்டுள்ள நியூயார்க் நகரில் முதல்முறையாக இரண்டு பூனைகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகியுள்ளது. இரண்டு பூனைகளுக்கும் ஒருசில அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதில் ஒரு பூனையின் உரிமையாளருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் மற்றொரு பூனையை பொறுத்தவரை வீட்டில் உள்ள வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பூனையிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவுமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் இன்னும் வரவில்லையாம்.


Advertisement