கனடா பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!

கனடா பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி.! அவரே வெளியிட்ட தகவல்.!


canada-pm-affected-by-corona

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவ  தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் மத்தியில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் கொரோனாவால் ஏராளமானோர் பலியாகினர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமெடுத்து ஓரளவிற்கு ஒமைக்ரான் என்ற பெயரில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ், கொரோனாவின் அடுத்த அலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் நான் நலமாக இருக்கிறேன். அலுவலகப் பணிகளை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்வேன். நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.