உலகம் லைப் ஸ்டைல்

ஆசையாக குழந்தைக்கு உணவு வாங்கி சென்ற தாய்..! வீட்டிற்கு சென்று திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!

Summary:

Burger with a BITE already taken out of it

லண்டனை சேர்ந்த பெண் ஒருவர் தனது 8 வயது குழந்தையுடன் Wolverhampton என்னும் பகுதியில் உள்ள பிரபல உணவகமான McDonald's இல் சிக்கன் பர்கர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவு வருவதற்கு நீண்ட நேரமாகியும் பொறுமையாக காத்திருந்த அந்த பெண் உணவு வந்ததும் அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு சென்றதும், பார்சலை திறந்து உணவை வெளியே எடுத்தபோது புதிதாக வாங்கப்பட்ட அந்த உணவு யாரோ பாதி கடித்து தின்றுவிட்டு மீதம் வைத்திருந்ததுபோல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து McDonald's நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார்.

தங்கள் தவறுக்கு வருந்திய அந்த நிறுவனம் அவரது பணத்தை திரும்ப தருவதாக கூறியதோடு, அவர் ஆர்டர் செய்த அதே உணவை இலவசமாக தருவதாகவும் கூறியுள்ளது. இந்த தவறு எப்படி நடந்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அதில், யாரேனும் ஆர்டர் செய்துவிட்டு உணவு பிடிக்காமல் திருப்பி அனுப்பியதை ஹோட்டல் ஊழியர்கள் தவறுதலாக பார்சல் செய்து இவரிடம் கொடுத்திருக்கலாம் எனவும், ஹோட்டல் ஊழியர் யாரேனும் பாதி உணவை தின்றுவிட்டு மீதியை பார்சல் செய்து கொடுத்திருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

 


Advertisement