உலகம்

ஒரே சவப்பெட்டிக்குள் தனது இரண்டு குழந்தைகளையும் போட்டு அடக்கம் செய்த தாய்.! நெஞ்சை உலுக்கிய சோக சம்பவம்..! படித்ததும் கலங்கும் கண்கள்..!

Summary:

Boy and girl dying on bed after being knifed by dad

தான் பெற்ற குழந்தைகளை தந்தையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லண்டனில் கடந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி தனது குழந்தைகளான நிகிஷ் (3) மற்றும் ஒன்றரை வயது பவின்யா ஆகிய இருவரையும் அவர்களது தந்தை நடராஜா நித்தியகுமார் (40) குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

இந்நிலையில், குழந்தைகளின் தாயான நிஷாந்தனி (35), தனது இரு குழந்தைகளையும் ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்துள்ளார். கொரோனா காரணமாக நண்பர்கள் ஒருசிலர் மட்டுமே இறுதி சடங்கில் கலந்துகொண்டனர். கடைசியாக ஆசையுடன் தனது குழந்தைகளின் கன்னங்களை வருடிக்கொடுத்து, அவர்களுக்கு பிடித்த கரடி பொம்மைகளையும் அவர்களுக்கு அருகில் வைத்து கண்ணீர் மல்க விடைகொடுத்தார் குழந்தைகளின் தாய் நிஷா.

மேலும் சிறுவயதில் இருந்து எடுக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படத்தை தனது குழந்தைகளின் சவப்பெட்டி அருகே வைத்து அந்த தாய் அழுதது அங்கிருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது.


Advertisement