உலகம்

திடீரென நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்..! மாணவர்கள் உட்பட 30 பேர் பலி.! ஆப்கானிஸ்தானில் பயங்கரம்.!

Summary:

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் மாணவர்கள் உட்பட 30 பேர் பலியாகி உள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு லோகர் மாகாண தலைநகர் புல்-இ-ஆலம் பகுதியில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே அருகே நேற்று மாலை வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் பள்ளி மாணவர்கள் உடபட 30 பேர் பலியானதாகவும், பலர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மருத்துவமனை கட்டிடம் மற்றும் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சுகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன.  மருத்துவ துறையை சார்ந்த பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை இந்த தாக்குதல் தொடர்பில் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.


 


Advertisement