திடீரென அடுத்தடுத்து நடந்த 2 வெடிகுண்டு வெடிப்பு! குழந்தைகள் உட்பட 16 பேர் பலி!bomb-blast-in-afganisthan-HCB8HQ

ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து நடந்த 2 வெடிகுண்டு தாக்குதல்களில் இளம்பெண்கள், குழந்தைகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் குண்டூஸ் மாகாணத்தின் வடகிழக்கில் வெடிகுண்டு ஒன்று நேற்று மாலை வெடித்ததில் வாகனம் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த வாகனத்தில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த 6 பெண்கள், சிறுமிகள் உட்பட 2 குழந்தைகள் மற்றும் ஆண் ஓட்டுனர் ஒருவர் என 15 பேர் உயிரிழந்தனர்.  2 பேர் காயமடைந்தனர்.

Bomb

இதனையடுத்து சில மணிநேரத்தில் சோதனை சாவடி ஒன்றில் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது.  அதில் இருந்த பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த இரு தாக்குதல்களையும் தலீபான் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் என அந்நாட்டு உள்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  ஆனால் இதுவரை இந்த தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் ஆப்கானிஸ்தான் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.