12க்கும் மேற்பட்ட மனித உடல்கள்..! உடல்பாகங்களை தனி தனியாக வெட்டி 26 பைகளில் கட்டி வீசிய கொடூரம்..! உலகை அதிரவைத்த கொலை சம்பவம்.!

மெக்சிகோ நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட 12-க்கும் அதிகமான மனித உடல்கள் 26 பைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் போதைப்பொருள் கடத்தல் அதிகம் உள்ள நாடக மெக்சிகோ இருந்து வருகிறது. குறிப்பாக இந்நாட்டில் உள்ள ஜலிஸ்கோ மாகாணத்தின் தலைநகரான குவாடலஜாரா பகுதி போதைப்பொருள் கடத்தல், அடிக்கடி வன்முறை, கடத்தல், கொலைகள் மற்றும் கோஷ்டி மோதல் அதிகம் நடைபெறும் பகுதியாக உள்ளது.
இன்னிலையில் இந்த பகுதியில் கடந்த 10 நாட்களில் மட்டும் துண்டுத்துண்டாக வெட்டப்பட்ட 12-க்கும் அதிகமான மனித உடல்கள் 26 பைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 9 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் உடல்பாகங்கள் அங்கிருந்த பண்ணை ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடல் பாகங்களை கொண்டு கொலை செய்யப்பட்டவர்களை அடையாளம் காண மிகவும் சிரமமாக இருப்பதாகவும், இதுவரை 2 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அனைவரையும் அடையாளம் காண குறைந்தது ஒருமாதம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்தவர்கள், கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை என்றும், இது பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களால் நடந்திருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகமே கொரோனா பிடியில் சிக்கி தவிக்கும்போது மெக்சிகோவில் நடந்த இந்த கொடூர கொலை அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.