உலகம்

உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட இந்திய நகரம்! ரோட்டில் எவ்வளவு நேரம் காத்துகிடக்கிறார்கள் தெரியுமா?

Summary:

bengaluru has world worst traffic

லொகேஷன் டெக்னாலஜி கம்பெனியான டாம் டாம் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் மிகவும் மோசமான போக்குவரத்து நெருக்கடிமிக்க நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. மேலும் இந்த ஆய்வு 57 நாடுகளில் உள்ள 416 நகரங்களில் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வு முடிவில், இந்திய நாட்டின் முக்கிய நகரங்களான பெங்களூரூ முதலிடத்தையும், மும்பை 4வது இடத்திலும், புனே 5வது இடத்திலும், டில்லி 8வது இடத்திலும் உள்ளது. பெங்களூரில் ஒரு ஆண்டிற்கு 243 மணிநேரங்களை மக்கள் போக்குவரத்து நெருக்கடியில் கழிக்கின்றனர். அதேபோல், மும்பை 209 மணி நேரத்தையும், புனே நகரில் 193 மணிநேரத்தையும், டில்லியில்190 மணிநேரங்களையும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் கழிக்கின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து  பிலிப்பைன்சின் மணிலா, கொலம்பியாவில் பகோடா, ரஷ்யாவிள் மாஸ்கோ, பெருவின் லிமா,  துருக்கியின் இஸ்தான்புல், இந்தோனேஷியாவின் ஜகர்த்தா ஆகிய நகரங்கள் மோசமான போக்குவரத்து நெரிசல் ஆய்வில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது.


Advertisement