உலகம்

ஐரோப்பிய வரலாற்றில் இதுதான் முதல் முறை! துணை பிரதமராக ஒரு திருநங்கை நியமனம்!

Summary:

வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சம்பவம் பெல்ஜியம் நாட்டில் நடைபெற்றுள்ளது.

பெட்ரா டி சட்டர் (Petra De Sutter) என்னும் 57 வயது திருநங்கை ஒருவர் ஐரோப்பாவின் முதல் திருநங்கை துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கை ஒருவரை துணை பிரதமராக நியமித்த பெருமை பெல்ஜியத்திற்கு கிடைத்துள்ளது.

மகப்பேறு மருத்துவரான பெட்ரா டி சட்டர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பசுமைக்கட்சி உறுப்பினராவார். பெல்ஜியத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சி கவிழ்ந்தபிறகு அங்கு நிலையான அரசு அமையாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது அங்கு அமைந்துள்ள புதிய அரசியல் கட்சியின் 7 துணை பிரதமர்களில் ஒருவராக பெட்ரா டி சட்டர்ம் நியமிக்கப்பட்டுள்ளார். 


Advertisement--!>