
beach-young married couple
ஐரோப்பிய நாடான இத்தாலியாய் சேர்ந்தவர் பெனெடெட்டோ. 45 வயதான இவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தன் காதலனுடன் இத்தாலியிலுள்ள காக்லியாரியில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், புதுமண தம்பதிகள் காக்லியாரிக்கு கிழக்கே காலா சின்ஜியாஸ் கடலில், மிதக்கும் பலூன் போன்ற சாதனத்தை பிடித்த படி மிதந்துள்ளனர். திடீரென 45 வயதான பெனெடெட்டோ நீரில் மூழ்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெனெடெட்டோ காதலன் அக்கம்பக்கத்தினரிடம் உதவியை நாடியுள்ளார்.யாரும் முன்வராத நிலையில், நல்லவேளையாக முன்னாள் உலக சாம்பியனான மகனிணி அப்பெண்ணை காப்பாற்றி அசத்தியுள்ளார்.
மகனிணி விரைந்து சென்று பெனெடேட்டோவை நீரில் மூழ்காமல், அவரின் தலையை பிடித்து காப்பாற்றியுள்ளார். இதனையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் விரைந்து பெனேடேட்டோவை மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர், பெனேடேட்டோ இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
Advertisement
Advertisement