உலகம் Covid-19

செப்டம்பர் வரை அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட உத்தரவு..! மாணவர்களின் நலன் கருதி வங்கதேச பிரதமர் அதிரடி!

Summary:

Bangladesh educational institutions to remain closed till September

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் வரும் செப்டம்பர் வரை இழுத்து மூடப்படுவதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் இதுவரை 3,064,225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 211,537 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்தவும், மருந்து கண்டுபிடிக்கவும் அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் வரும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசத்திலும் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது.

இதனிடையே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா முக்கிய அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரஸ் மூலம் ஆலோசனை நடத்தியபிறகு மாணவர்கள் உள்பட அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவே வங்காளதேசத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் செப்டம்பர் மாதம் வரை மூடுவதாக பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.


Advertisement