விமானத்தில் உணவு பொட்டலத்தை கொண்டு‌ வந்தவருக்கு 1.4 லட்சம் அபராதம்.. காரணம்‌ தெரிஞ்சா கலங்கி போயிடுவீங்க..!

விமானத்தில் உணவு பொட்டலத்தை கொண்டு‌ வந்தவருக்கு 1.4 லட்சம் அபராதம்.. காரணம்‌ தெரிஞ்சா கலங்கி போயிடுவீங்க..!



Australia airport authority fined 1.4 lakh for un authorrized good

சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவின் பாலியில் இருந்து ஆஸ்திரேலியாவின் டார்வின் விமான நிலையத்திற்கு ஒருவர் இளைஞர் வந்து சேர்ந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்த நாய் ஒன்று அந்த நபரின் பையில் உணவுப் பொட்டலம் இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டது.

அதன் பின்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் சான்ட்விச் பார்சல் ஒன்றினை அந்த நபர் வைத்துள்ளார். இந்தோனேசியாவில் சமீபத்தில் கோமாரி‌ என்ற குழம்பு வாய் நோய் கால்நடைகளை பெரிதும் தாக்கியது. 

Darwin airport

அந்த நோய் ஆஸ்திரேலியாவில் பரவினால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு வரும்‌ என கருதி அந்நாட்டு அரசு இந்தோனேசியாவில் இருந்து எந்தவிதமான உணவு பொருட்களை ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டு வரக்கூடாது என கடுமையான சட்டத்தை விதித்துள்ளது. 

இந்த விவரம் தெரியாமல் இந்தோனேசியாவில் இருந்து சான்ட்விச் பார்சலை ஆஸ்திரேலியாவிற்குள் கொண்டு வந்த அந்த இளைஞருக்கு 2664 ஆஸ்திரேலியா டாலர் (1.4 லட்சம் இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.