உலகம் வர்த்தகம்

ஆப்பிள் ஐபோனை பயன்படுத்தியதற்கு தண்டனையுடன் அபராதமா? ஹுவாய் நிறுவனம் அதிரடி நடவடிக்கை.!

Summary:

appel iphone - america - huawei industries china

ஆப்பிள் ஐபோன்களை பயன்படுத்திய தனது இரண்டு ஊழியர்களை, சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவனம் தகுதி நீக்கம் செய்து அபராதம் விதித்துள்ளது.

உலகின் முன்னணி ஸ்மார்ட் போன் விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்குவது ஹூவாய் நிறுவனம். கடந்த ஆண்டிலிருந்து ஸ்மார்ட் போன் விற்பனையில் உலகில் இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தனது நிறுவனத்தில் பணி புரியும் இரண்டு ஊழியர்கள் ஆப்பிள் ஐபோனை பயன்படுத்தி புத்தாண்டு வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Image result for apple iphone

இதனை கண்டறிந்த ஹூவாய் நிறுவனம் அந்த 2 ஊழியர்களையும் தகுதி நீக்கம் செய்து 5,௦௦௦ யுவான்கள் (730 டாலர்) அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிறுவனத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், ஹூவாய் நிறுவனத்தின் தலைமை கணக்காளர் மெங்க் வான்சாவூ என்பவர் அமெரிக்க வங்கியில் பண சேமிப்பு தொடர்பான விவகாரத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பொருளை பயன்படுத்திய ஊழியர்களிடம் ஹூவாய் கண்டிப்பு காட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


Advertisement