உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இறந்துபோன பெண்ணின் உதவியுடன் 2 வருடம் கழித்து குழந்தை பெற்ற பெண்..! வினோத சம்பவம்..!

Summary:

American girl deliver male baby with transplanted uterus

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா என்னும் பகுதியை சேர்ந்தவர் 33 வயதாகும் பெண் ஜெனிபர் கோப்ரெட். இவரது பிறவியில் இருந்தே இவருக்கு கர்ப்பப்பை இல்லை. தன்னால் மற்ற பெண்களைப்போல இயல்பாக குழந்தை பெற்றுக்கொள்ளமுடியாது என்று தெரிந்தும் டிரியூ என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஜெனிபர் கோப்ரெட்.

திருமணத்திற்கு பிறகு தங்களுக்கும் ஒரு குழந்தை வேண்டும், அதையும் நாந்தான் பெற்றெடுப்பேன் என ஆசைப்பட்ட ஜெனிபர் கோப்ரெட் அதற்காக மருத்துவர்களை நாடியுள்ளார். மருத்துவர்களின் அறிவுரைப்படி ஜெனீபருக்கு இறந்த பெண் ஒருவரின்  கருப்பை பொருத்தி அதன் மூலம் குழந்தை பிறக்கவைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து இறந்துபோன பெண்ணிடம் இருந்து தனமாக பெறப்பட்ட கர்ப்பப்பை ஜெனிபர்க்கு பொருத்தப்பட்டது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெனிபர் கர்பமடைந்தார். அவருக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இறந்த பெண்ணிடம் இருந்து தானமாக பெற்ற கருப்பை உதவியுடன் ஜெனீபர் குழந்தை பெற்றது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. உலகளவில் 2 பேர் மட்டுமே இறந்த பெண்ணிடம் தானமாக பெற்ற கருப்பை மூலம் குழந்தை பேறு அடைந்துள்ளனர். அதில் ஜெனீபர் 2-வது நபர் ஆவார்.


Advertisement