அட்டகாசமான ஆக்சன் காட்சிகள்.. பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம்.. வெளியானது சலார் படத்தின் டிரைலர்..!
உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்தில் இறங்கும் அமெரிக்கா?... அதிகாரப்பூர்வ தகவல்.!
உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்தில் இறங்கும் அமெரிக்கா?... அதிகாரப்பூர்வ தகவல்.!

அமெரிக்க படைகளை ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் மண்ணுக்கு அனுப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 13 ஆவது நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டினை நேட்டோவுடன் இணைக்கும் முயற்சி தோல்வியை சந்தித்த நிலையில், இதற்கு மேல் நேட்டோவுடன் உக்ரைனை இணைப்பது சாத்தியமற்றது என்பதை உணர்ந்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அம்முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கிறார்.
உக்ரைனை சரணடையச்சொல்லி தொடர்ந்து ரஷியா போர் நடத்தி வரும் நிலையில், ரஷியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் கூட்டணி நட்பு நாடுகள் பலவும் பொருளாதார தடைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களை சந்தித்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "அமெரிக்காவில் அதிகளவு எண்ணெய் வளம் மற்றும் அதற்கு மாற்றான எரிபொருள் சக்தி இருக்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்புகிறார். இதனால் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் எண்ணம் இல்லை.
ரஷியாவுக்கு எதிரான உக்ரைன் படையெடுப்பில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க படைவீரர்களை அனுப்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை. எங்களது முனைப்பு உலகப்போரை தடுப்பது எப்படி என்பது தான். அதனால் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்க வீரர்கள் களமிறக்கப்படமாட்டார்கள்" என்று தெரிவித்தார்.