பிராவுடன் மாணவிகளை நிற்கவைத்த ஆசிரியர்; மருத்துவக்கல்வி என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல்.!

மாணவர்களுக்கு நல்வழி சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆசிரியரே, தனது பணியை கேடயமாக பயன்படுத்தி மாணவிகளிடம் நூதன முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியர், மாணவிகளிடம் வகுப்பறையில் சட்டையை கழட்ட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ கல்வி கற்பிப்பதன் ஒரு பகுதியாக மாணவிகளிடம் ஆசிரியர் ஆபாசமாக நடந்துள்ளார். ஆடைகளை காழற்றுமறு உத்தரவிட்ட அவர், பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும் தெரிய வருகிறது.
இது குறித்து 11 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், தற்போது அவரை பணியிலிருந்து நீக்கி உள்ளனர்.
மேலும், ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து வகுப்பின் முன் நிற்கும்போது, பெண்களின் மார்பகங்கள் குறித்தும் சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நடந்த அக்டோபர் மாதம் 2019 நடந்ததாக கூறப்படும் நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பின் பேராசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், பல்லாயிரக்கணக்கான மாணவிகளிடம் பேராசிரியர் இவ்வாறு நடந்து கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.