உக்ரைனின் மீது படையெடுக்கும் ரஷியா.. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா.. என்ன செய்யப்போகிறது ரஷியா?.!

உக்ரைனின் மீது படையெடுக்கும் ரஷியா.. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா.. என்ன செய்யப்போகிறது ரஷியா?.!


America Warning about Russia Invasion Ukraine Feb Month

நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டினை சேர்க்க கூடாது, உக்ரைன் ரஷியாவை சேர்ந்தது என்று ரஷியா தெரிவித்து வருகிறது. மேலும், இதுகுறித்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் முன்மொழிந்த நிலையில், அதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து ரஷியாவின் கோரிக்கையை நிராகரித்தது.

America

இந்த நிலையில், ரஷியா உக்ரைனின் மீது படையெடுத்து அதனை கைப்பற்றும் நோக்கில், ரஷியா - உக்ரைன் எல்லைப்பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தி வருகிறது. இதுதொடர்பான குற்றச்சாட்டை அமெரிக்கா முன்வைத்து இருந்தாலும், அதனை ரஷியா ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது. 

America

உலகளவில் நிலவி வரும் இப்படியான பரபரப்பு சூழலில், உக்ரனின் மீது ரஷியா பிப்ரவரி மாதம் படையெடுப்பு நிகழ்த்தலாம் என அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் எச்சரித்து இருக்கிறார்.