74 ஆண்டுகள் வேலையில் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காத பாட்டி; 90 வயதில் மாஸ் சாதனை படைத்த பியூட்டி.!

அமெரிக்காவில் இருக்கும் டெக்சஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மெல்பா மெபென் (வயது 90). இவர் கடந்த 74 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
தான் பணியாற்றி வந்த நிறுவனத்தில் அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுத்ததும் இல்லை. தனது 16 வயதில் ஷாப்பிங் மாலில் லிப்ட் ஆபரேட்டர் பணிக்கு சென்ற மெல்பா, இறுதி வரை அங்கேயே பணியாற்றியுள்ளார்.
முதலில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தவர், பின்னர் அழகு சாதன பிரிவிலும் வேலை பார்த்து வந்துள்ளார். அவரின் செயலை பார்ட்டி நிறுவனத்தார் அவரின் குடும்பத்துடன் கொண்டாட்டத்தை நிகழ்த்தினார்.
தற்போது 90 வயதை கடந்துள்ள மெல்பா மெபென் 30ம் தேதி ஓய்வை பெற்றுள்ளார்.