போட்டோவுக்கு போஸ் கொடுக்க நினைத்து, விருதை சுக்கு நூறாக உடைத்த பாடகி.. அதிர்ச்சியில் கதறிய சம்பவம்.!

போட்டோவுக்கு போஸ் கொடுக்க நினைத்து, விருதை சுக்கு நூறாக உடைத்த பாடகி.. அதிர்ச்சியில் கதறிய சம்பவம்.!


america-singer-broken-her-award

அமெரிக்க பாடகியான ஒலிவியா ரோட்ரிகோ புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சென்று, தான் வாங்கிய 3 விருதுகளில் ஒரு கோப்பையை கீழே தவற விட்டு உடைந்ததால் மிகவும் அதிர்ச்சியடைந்தார்.

அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் 64-வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் 19 வயதுடைய அமெரிக்க பாடகியான ஒலிவியா ரோட்ரிகோ என்பவர் 3 பிரிவுகளின் கீழ் கிராமி விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில், தனது விருதுகளை வாங்கிகொண்டு வந்த ஒலிவியா ரோட்ரிகோ, தான் வாங்கிய 3  கிராமி விருதுகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் ஆர்வத்தில், அவர் கையில் இருந்த ஒரு கோப்பையை கீழே தவற விட்டதால் அது இரண்டாக உடைந்துள்ளது.

America

தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான நினைத்த கோப்பை கீழே விழுந்து உடைந்ததால் மிகவும் அதிர்ச்சியடைந்த ஒலிவியா ரோட்ரிகோ, உதவியாளர் ஒருவர் அதனை ஓட்டி கொடுக்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்துள்ளார்.