
அமெரிக்காவில் 6 கால்கள், இரண்டு வாலுடன் வித்தியாசமான நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
அமெரிக்காவில் 6 கால்கள், இரண்டு வாலுடன் வித்தியாசமான நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
உலகின் பல இடங்களில் பலவிதமான வினோத சம்பவங்கள் நடப்பது வழக்கம். குறிப்பாக இரண்டு தலை கன்றுக்குட்டி, புறா முகம் கொண்ட மீன் இப்படி பலவிதமான வினோத சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் 6 கால்கள், இரண்டு வாலுடன் வித்தியாசமான நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் உள்ள நீல் கால்நடைகள் மருத்துவமனையில்தான் இந்த வினோத நாய்க்குட்டி பிறந்துள்ளது. புதிதாக பிறந்த இந்த நாய்க்குட்டிக்கு ஆறு கால்கள் மற்றும் இரண்டு வால்கள், இரண்டு இடுப்பு பகுதிகள் உள்ளன. இந்த நாய்க்குட்டிக்கு மருத்துவர்கள் ஸ்கிப்பர் என பெயர் வைத்துள்ளனர்.
ஒருவித பிறவி கோளாறு மற்றும் மரபணு மாற்றத்தால் இதுபோன்று அந்த நாய்க்குட்டி பிறந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Advertisement