மகளை திருடன் என நினைத்ததால் சோகம்.. நள்ளிரவில் தந்தை பரபரப்பு சம்பவம்.. பறிபோன உயிர்.!

மகளை திருடன் என நினைத்ததால் சோகம்.. நள்ளிரவில் தந்தை பரபரப்பு சம்பவம்.. பறிபோன உயிர்.!


America Ohio State Father Kills Daughter Wrongly Justify She Is Thief Try to Enter Home

தனது மகளை திருடன் என தவறாக நினைத்த தந்தை, நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் வீட்டில் திருட வருகிறார் என எண்ணி மகளையே சுட்டுக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓஹையோ மாகாணம், கொலம்பஸ் நகரத்தில் இருக்கும் பிபர் பெண்ட் ட்ரைவ் பகுதியை சார்ந்தவர் ஹரிஸ்டன். இவரது மகள் ஜெனி (வயது 16). கடந்த 25 ஆம் தேதி இரவு இவர்களின் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை குடும்பத்தினர் நிறைவு செய்த நிலையில், ஹரிஸ்டன் மற்றும் மனைவி உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். 

ஜெனி தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுவிடவே, அவர் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் பின்புறம் வழியாக ஜெனி வருகை தந்த நிலையில், வீட்டின் பின்புறம் வழியாக யாரோ வருகிறார்கள் என்ற சத்தத்தை ஹரிஸ்டன் உணர்ந்துள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த ஹரிஸ்டன், தனது மகளை திருடன் என எண்ணி துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கு இருட்டில் மர்ம நபர் வீட்டிற்குள் நுழைவது போன்று இருக்கவே, அதிர்ச்சியடைந்த ஹரிஸ்டன் மகளை திருடன் என எண்ணி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த ஜெனி, வலியால் கதறி துடித்துள்ளார்.

America

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஹரிஸ்டன் மற்றும் அவரது மனைவி உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜெனியை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்க, சிகிச்சை பெற்று வந்த ஜெனி சில நிமிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜெனியின் தந்தை ஹரிஸ்டன் மற்றும் அவரது தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.