உலகம்

வீட்டில் பிணத்துடன் மீட்கப்பட்ட 125 பாம்புகள்... கதவை திறந்து பதறிப்போன அதிகாரிகள்.!

Summary:

வீட்டில் பிணத்துடன் மீட்கப்பட்ட 125 பாம்புகள்... கதவை திறந்து பதறிப்போன அதிகாரிகள்.!

அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து, சார்லஸ் கவுண்டியில், 49 வயது நபர் அவரின் இல்லத்தில் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் வீட்டிற்குள் சென்று சோதனை செய்துள்ளனர்.

அப்போது, இறந்தவரின் சடலத்தை சுற்றிலும் பாம்புகள் நெளிந்துகொண்டு இருந்துள்ளது. இதன்பின்னர், பாம்பு பிடிக்கும் நபர்கள் வரவழைக்கப்பட்டு 125 பாம்புகள் மீட்கப்பட்டன. இதில், 14 அடி நீளமுள்ள மஞ்சள் பர்மிய மலைப்பாம்பும் இருந்துள்ளது. இறந்த நபர் தனது வீட்டில் இருந்து ஒரு நாட்களுக்கும் மேல் ஆட்கள் நடமாட்டம் இல்லாததது போல தென்பட்டதால், சந்தேகத்தின் பேரில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்துபோனவர் பாம்பு கடித்து இறந்தாரா? அவரின் வீட்டிற்குள் பாம்புகள் எப்படி கூட்டமாக வந்தது? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனைக்காகவும் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


Advertisement