அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி கூறிய பரபரப்பு தகவல்!

அமெரிக்க தாக்குதல் குறித்து ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி கூறிய பரபரப்பு தகவல்!



America iran

சமீபத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இராணுவ தளபதி காசிம் சுலைமானி இறப்பு ஈரானில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஈரான் அரசு தாங்கள் கண்டிப்பாக அமெரிக்காவை பழிவாங்குவோம் என்று வெளிப்படையாக கூறியது. 

அதேபோல் நேற்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை ஈரான் தாக்கியுள்ளது. மேலும் ஈரானில் உள்ள அமெரிக்க விமான படைத்தளங்கள் மீது 12 ஏவுகணைகளை கொண்டு அதிரடியாக தாக்கியது ஈரான் ராணுவம்.

America

மேலும் இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இத்தகவல் குறித்த முழு விவரம் இன்று வெளியாகும் என்று அதிபர் டிரம்ப் நேற்று கூறியிருந்தார். 

இந்நிலையில் தற்போது இந்த தாக்குதலில் ஃபத்தே 110 பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தாகவும் ,இந்த ஏவுகணைகள் 186 கி.மீ இருந்து 300 கி.மீ. வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது. இந்த தாக்குதலுக்கு ''தியாகி சுலைமானி 'என பெயரிடப்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த தாக்குதல் குறித்து ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி பழிக்கு பழி தாக்குதல் நடத்தி அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என கூறியுள்ளார்.